தமிழகத்தில் அனைத்து நூலகங்களும் வழக்கம் போல் இயக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்கவும், அவை வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்கவும், அவை வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை தத்தனேரியை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நூலகங்கள் மட்டும் முன்பு போல இயங்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவை வழக்கம் போல் இயங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, கிராமப்புற நூலகங்கள் மிகவும் முக்கியம் என்பதால் அவற்றை திறக்க வேண்டும் என உத்தரவிட்டது.
4 வாரங்களுக்குள் அனைத்து நூலகங்களை திறக்கவும் வழக்கம் போல் இயங்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Comments