'திருக்கோவில்' தொலைக்காட்சி தொடங்க தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

0 5390
திருக்கோவில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு இந்து சமய அறநிலைய துறை பொது நல நிதியை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருக்கோவில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு இந்து சமய அறநிலைய துறை பொது நல நிதியை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அறநிலையத் துறை சார்பில் திருக்கோவில்களின் விழாக்களை ஒளிபரப்புவதற்காக, 8.77 கோடி ரூபாய் மூலதன செலவில் திருக்கோவில் என்ற பெயரில் தொலைக்காட்சி துவங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, திருக்கோவில் தொலைக்காட்சிக்கு அறநிலைய பொது நல நிதியை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments