திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்த ஏற்பாடு

0 5341
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லூரில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில்களுக்கு பசு வழங்கும் கோமாதா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். இத்திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

தேவஸ்தானம் சார்பில் கல்யாண மஸ்து திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இலவசமாக திருமணங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்,மே 28, அக்டோபர் 30, நவம்பர் 17 ஆகிய தேதிகளில் திருமணம் நடத்தப்படும் என்றார். இதற்கு ஆன் லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments