தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக்கு இடையே கடையில் தேநீர் அருந்திய முதலமைச்சர்

தென்காசி மாவட்டத்தில் பரப்புரைப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலங்குளம் அருகே மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள தேநீர்க்கடையில் தேநீர் அருந்தினார்.
தென்காசி மாவட்டத்தில் பரப்புரைப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலங்குளம் அருகே மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள தேநீர்க்கடையில் தேநீர் அருந்தினார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அதிமுக இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
பின்னர் அங்கிருந்து பாவூர்ச்சத்திரம் செல்லும் வழியில் மகிழ்வண்ணநாதபுரத்தில் சாலையோரத்தில் தேநீர்க் கடையைப் பார்த்த அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்குள்ள தேநீர்க் கடைக்குச் சென்று அமர்ந்து தேநீர் அருந்தினார்.
தேநீர் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருப்பதாகக் கூறிப் பாராட்டுத் தெரிவித்தார்.
Comments