25 ஆம் தேதி கோவைக்கு வருகிறார் பிரதமர் மோடி... அரசு திட்ட விழா, பா.ஜ.க பிரசார கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வருகிற 25-ந்தேதி அரசு நிகழ்ச்சி மற்றும் பா.ஜனதாவின் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கோவைக்கு வருகிறார்.
கொடிசியா அரங்கில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். அரசு நிகழ்ச்சி முடிந்ததும் நேராக கார் மூலம் பா.ஜனதாவின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானத்திற்கு செல்கிறார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை ஆற்றுகிறார்.
பிரதமர் மோடியின் கோவை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே மாநகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
Comments