மார்ச் 14 ஆம் தேதி நடைபெறுகிறது தி.மு.க. மாநில மாநாடு... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மார்ச் 14-ம் தேதி திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மார்ச் 14-ம் தேதி திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இதனை கூறினார். திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற அவர், அது மக்களின் வெற்றியாக அமையும் என்றார்.
தேர்தலில் வெற்றிமுகட்டை எட்டுவதற்கான பயணத்தில் திமுகவின் 11-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments