இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

இந்தியாவின் மிக நீளமான 18 கி.மீ. ஆற்றுப்பாலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவின் மிக நீளமான 18 கி.மீ. ஆற்றுப்பாலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டினார்.
அசாமில் துப்ரி-புல்பரி இடையே பிரம்மபுத்ரா ஆற்றின் மீது 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் 18 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.
நாட்டின் மிக நீளமான சாலைப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி, இந்த பாலம் கட்டப்பட்டால் பயண நேரம் சுமார் 5 மணி நேரம் வரை மிச்சமாகும் என்றார்.
அசாம்- மேகாலயா இடையே உள்ள 250 கி.மீட்டர் தூரம் பாலம் கட்டப்பட்ட பின்னர் 20 கிலோ மீட்டராக குறையுமென அவர் குறிப்பிட்டார். அண்டை நாடுகளுடனான போக்குவரத்திற்கும் பாலம் பயன்படுமென அவர் தெரிவித்தார்.
Comments