தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கின் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பரப்பில் நிலவும் சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென அவர் கூறினார்.
19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற அவர், அடுத்த இருநாட்களுக்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
Comments