கோவில் சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர் விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு

கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அந்த சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்பது குறித்த முழு விவரத்தை இணையதளத்தில் வெளியிட தமிழக அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அந்த சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்பது குறித்த முழு விவரத்தை இணையதளத்தில் வெளியிட தமிழக அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் வாடகை உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரி, தொடரப்பட்ட வழக்கில், பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில் கோவில் நில குத்தகை மற்றும் வாடகைதாரர்களான 14 ஆயிரத்து 26 பேரிடமிருந்து 32 கோடியே 49 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டதாக அரசு கூறியிருந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவில் சொத்துக்கள் தொடர்பாக முழுவிபரங்களையும் 8 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டனர்.
Comments