மருத்துவர்களுக்கு தனி விசா.. பிரதமர் மோடி யோசனை

0 3886
தெற்காசிய ஆசிய நாடுகளின் மருத்துவர்கள், செவிலியர்களுக்காக தனி விசா நடைமுறையை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

தெற்காசிய ஆசிய நாடுகளின் மருத்துவர்கள், செவிலியர்களுக்காக தனி விசா நடைமுறையை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பான பிராந்திய மாநாட்டை இந்தியா நடத்தியது. ‘கொரோனா மேலாண்மை, அனுபவம், நல்ல நடைமுறைகள், முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பிலான இம்மாநாட்டில் இந்தியாவுடன் இணைந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மொரீஷியஸ், செஷல்ஸ் ஆகிய 10 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தியாவின் சுகாதார செயலாளர் தலைமை வகித்த இந்த மாநாட்டில்,, ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அதன் சுகாதார செயலாளர் மற்றும் கொரோனா மேலாண்மை தொழில்நுட்பக் குழுத் தலைவர் என தலா இருவர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து காணொலியில் பேசிய பிரதமர் மோடி, நமது பிராந்திய நாடுகள் மற்றும் உலகின் விருப்பத்திற்கு இணங்க கொரோனா தடுப்பூசி மருந்து வேகமாக கண்டறியப்பட்டுள்ளது என்றார். இப்போது 10 நாடுகளுக்கும் இடையிலான சுகாதார நல்லுறவு மேம்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

10 நாடுகளின் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தனி விசா நடைமுறை கொண்டு வர வேண்டுமென்ற அவர், இதனால் பேரிடர் காலங்களில் சுகாதார ஊழியர்கள் மற்ற நாடுகளுக்கு விரைந்து செல்ல முடியும் என்றார்.

10 நாடுகளுக்கும் இடையே விமான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க ஒப்பந்தம் மேற்கொள்ளலாமா என்று வினவிய அவர், 10 நாடுகளில் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமென்றார்.

நடப்பு நூற்றாண்டு ஆசியாவிற்கு உரியதாகவே இருக்கும் என்ற அவர் தெற்காசிய மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளிடையிலான ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments