அமைச்சர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது திட்டமிட்ட தாக்குதல் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

0 1986
மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தில் அமைச்சர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது திட்டமிட்ட தாக்குதல் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தில் அமைச்சர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது திட்டமிட்ட தாக்குதல் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகீர் உசைன், புதன்கிழமை இரவு நிம்திதா ரயில் நிலையத்துக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்தது.

குண்டுவெடிப்பில் அமைச்சர் உள்ளிட்ட 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் 14 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரை முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்று பார்த்தார். அதன்பின் பேசிய அவர், இது திட்டமிட்ட தாக்குதல் எனத் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாகவே அவரைத் தங்கள் கட்சியில் சேரும்படி சிலர் நெருக்கி வந்ததாகவும் குற்றஞ்சாட்டினார். ரயில் நிலையத்தில் தாக்குதல் நடந்ததால் இதற்கு ரயில்வே துறையே பொறுப்பு எனவும் மம்தா பானர்ஜி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments