சக்ரா படத்திற்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடை நீக்கம்

0 2946
நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடுவதற்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடுவதற்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிரைடன் ஆர்ட்ஸ் ரவி என்ற தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இருதரப்பு விசாரணைக்குப் பின் சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன், படத்தின் இரண்டு வார  தியேட்டர் வசூல் தொகை குறித்து மார்ச் 10 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிட்டார்.  உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை நீக்கியதை அடுத்து திட்டமிட்டபடி சக்ரா படம் நாளை வெளியாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments