குஜராத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட கே-9 வஜ்ரா-டி பீரங்கிகளை தொடங்கி வைத்தார் ராணுவத் தளபதி

0 1014
ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள கே-9 வஜ்ரா-டி பீரங்கிகளை, ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே தொடங்கிவைத்தார்.

ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள கே-9 வஜ்ரா-டி பீரங்கிகளை, ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே தொடங்கிவைத்தார்.

இந்த பீரங்கிகள், குஜராத் மாநிலம் சூரத் புறநகர்பகுதியான ஹாசிராவில் எல் அண்டு டி டிஃபென்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

அந்த ஆயுதத் தொழிற்சாலைக்கு சென்ற ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே, ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு செல்வதற்காக பீரங்கிகளை தொடங்கி வைத்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், 100 கே-9 வஜ்ரா-டி பீரங்கிகளை தயாரித்து தர, 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம், எல் அண்டு டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

50 டன் எடை கொண்ட இந்த பீரங்கிகள், 47 கிலோ எடை கொண்ட குண்டுகளை, 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் குறிவைத்து தாக்கக் கூடியவை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments