'என் மனைவி பிரிந்து செல்ல நீதான் காரணம் '- அருள்வாக்கு சொன்ன சாமியாருக்கு சரமாரி கத்திக்குத்து

0 6780
மனைவி கோபித்து கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன், அருள்வாக்கு சொன்ன சாமியாரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் சென்னை மதுரவாயல் அருகே அரங்கேறியுள்ளது.

மனைவி கோபித்து கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன், அருள்வாக்கு சொன்ன சாமியாரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் சென்னை மதுரவாயல் அருகே அரங்கேறியுள்ளது.

அகில இந்திய இந்து மகாசபாவின் ஆன்மீக நிர்வாகியான ஆலப்பாக்கம் ராஜேந்திரன்,  ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயம் வைத்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்.

அருகில் வசிக்கும் திருமலை என்பவரது மனைவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு சாமியார் அருள்வாக்கு சொன்னதுதான் காரணம் என எண்ணிய திருமலை, ராஜேந்திரனை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

சாமியாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள், திருமலையை மடக்கி பிடித்து சரமாரியாக உதைத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். கத்திக்குத்து பட்ட அருள்வாக்கு சாமியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments