சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பதற்றமான வாக்குசாவடிகளை கணக்கெடுக்கும் பணி... தமிழக உளவு பிரிவு போலீசார் தீவிரம்

0 1518
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பதற்றமான வாக்குசாவடிகள் பட்டியலை தயார் செய்யும் பணியில் தமிழக உளவு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பதற்றமான வாக்குசாவடிகள் பட்டியலை தயார் செய்யும் பணியில் தமிழக உளவு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில், 475 வாக்குசாவடிகள் பதற்றமானவையாகவும், 157 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி இருந்தாலும், பிரச்சனை ஏற்பட்டு மறுவாக்குபதிவு செய்திருந்தாலும், குறைவான வாக்குகள் பதிவானவையும் பதற்றமான வாக்குசாவடிகளாக கருதப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிபிட்ட சமூகத்தினர் ஆதிக்கம், சமூக மோதல் ஏற்படக்கூடிய இடங்கள், ரவுடி கும்பல் செயல்படும் இடங்களில் உள்ள வாக்குசாவடிகள் மிக பதற்றமானவையாக கணக்கிடப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments