புதுக்கோட்டையில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை அருகே 17 வயது மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவனை காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனுக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டேனிஷ் பட்டேலை கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை கடத்தி பாலியல் சித்திரவதை செய்து, கொலை செய்த குற்றத்திற்காக 3 பிரிவின் கீழ் டேனிஷ் பட்டேலுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் ஒரு பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ஒன்பது லட்ச ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று அரசுக்கு நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.
Comments