சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அஜித் திடீர் வருகை: பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி!

நடிகர் அஜித், ஷார்ட் ஹேர் ஸ்டைலுடன் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருக்கும் நடிகர் அஜித்குமார், அவ்வப்போது துப்பாக்கி சூடும் பயிற்சிக்காக அங்கு செல்வது வழக்கம். அங்கு செல்ல, தனது வீட்டிலிருந்து கால் டாக்சி புக் செய்த அஜித்தை, கார் ஓட்டுநர் தவறுதலாக புதிய காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
இடம் மாறி வந்திருப்பதை அஜித்துக்கு காவலர்கள் தெரியப்படுத்தியதையடுத்து, அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
இதனிடையே நடிகர் அஜித்தை பார்த்த ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு செல்பி எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் உலாவருகின்றன.
Comments