2020 ஆகஸ்ட் இறுதியில் இந்தியா - சீனா போர் அபாயம் ஏற்பட்டது - வடக்கு பிராந்திய தலைமை ராணுவ அதிகாரி தகவல்

0 1557
கடந்த ஆண்டு லடாக்கின் கைலாஷ் மலைச்சிகரங்களில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டதாக மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு லடாக்கின் கைலாஷ் மலைச்சிகரங்களில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டதாக  மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

லடாக் தலைநகரான லே-யில் செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு பிராந்திய ராணுவ தலைமை தளபதி ஜோஷி, அந்த போர் கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டதாக கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில், பங்கோங் ஏரியின் தெற்குப் பகுதியில் உள்ள கைலாஷ் சிகரங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியது. நமது ராணுவ டாங்குகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டன.

அதனால் ஆத்திரமடைந்த சீன துருப்புகள் தாங்களும் டாங்குகளை கொண்டு வந்து போருக்கான முஸ்தீபுகளில் இறங்கியதாக அவர் தெரிவித்தார். அந்த சவாலான நேரத்தில் பொறுமையை கடைப்பிடித்ததால் போர் தவிர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments