ஈரான்-ரஷ்யா கடற்போர் ஒத்திகையில் இந்தியா பங்கேற்கும் என்ற தகவலுக்கு இந்திய கடற்படை மறுப்பு

ஈரான்-ரஷ்யா கடற்போர் ஒத்திகையில் இந்தியா பங்கேற்கும் என்ற தகவலுக்கு இந்திய கடற்படை மறுப்பு
ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் சேர்ந்து இந்திய பெருங்கடலில் போர் ஒத்திகை நடத்துவதாக வெளியான செய்திகளை இந்திய கடற்படை மறுத்துள்ளது.
இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் இந்த நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும், ஈரான்-ரஷ்யா கடற்வழி பாதுகாப்பு என்ற பெயரில் 2 நாள் ஒத்திகை நடத்துவதாக செய்திகள் வெளியாகின. இது போன்ற ஒத்திகை எதிலும் இந்தியா பங்கேற்கவில்லை என கடற்படை அறிக்கை ஒன்றில் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஈரான்-ரஷ்ய ஒத்திகைக்கு பொறுப்பான ஈரான் கடற்படை அதிகாரி தஹானி என்பவர், இந்த ஒத்திகையில் ஏராளமான ரஷ்ய கப்பல்களும் கலந்து கொள்வதாகவும், வேறு நாடுகள் விரும்பினால் இதில் கலந்து கொள்ளலாம் என கூறியதாக சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. அதன் பின்னணியில் இந்தியாவும் கலந்து கொள்வதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியானது என கூறப்படுகிறது.
Comments