அதிமுக அரசு எந்த திட்டமும் செய்யவில்லை என மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சைப் பொய் - முதலமைச்சர்

0 1856
அதிமுக அரசு எந்த திட்டமும் செய்யவில்லை என மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சைப் பொய் - முதலமைச்சர்

அதிமுக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி க் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே செட்டப் செய்த மனுக்களை படித்து தமது கூட்டங்களில் மக்களை ஏமாற்றும் நாடகத்தை திமுக தலைவர் அரங்கேற்றுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிகாரத்தில் இருந்தபோது மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தவறிய ஒரேகட்சி திமுக என விமர்சித்தார்.

சட்டம்-ஒழுங்கை பேணிப் பாதுகாப்பதன் மூலம் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், திமுகவினருக்கு கொடுத்து பழக்கமல்ல, எடுத்துதான் பழக்கம் எனறும் விமர்சித்தார்.

பிரச்சாரத்தின்போது கூட்டத்தில் பச்சிளங்குழந்தை ஒன்றை பரிவுடன் கையில் வாங்கினார்.

களக்காட்டில் மகளிர் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவரோ பொதுமக்களோ கோரிக்கை வைக்காத நிலையிலும், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை செயல்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments