ராகுல்காந்தியை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட கல்லூரி மாணவி..! பரவசத்தில் துள்ளிக்குதித்து கண்ணீர் விட்டு அழுத வைரல் வீடியோ

0 7261
ராகுல்காந்தியை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட கல்லூரி மாணவி..! பரவசத்தில் துள்ளிக்குதித்து கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரல்

புதுச்சேரியில், ராகுல் காந்தியிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த கல்லூரி மாணவி, பரவசத்தில் துள்ளிக்குதித்து கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

புதுச்சேரிக்கு சுற்றுப்பயணம் வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கல்லூரி மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, மேடையில் நின்றிருந்த ராகுலிடம், மாணவி ஒருவர் ஆட்டோகிராப் கேட்டு வந்தார்.

ராகுல் காந்தி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த சந்தோஷத்தில் அந்த மாணவி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். மாணவி, உணர்ச்சி வசப்பட்டதை பார்த்த ராகுல்காந்தி, மாணவியை தோழோடு சாய்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவரை ஆசுவாசப்படுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments