தெலுங்கானாவில் வழக்கறிஞர் தம்பதி நடுரோட்டில் வழிமறித்து வெட்டிக் கொலை: பதைபதைக்கும் படுகொலை காட்சிகள் வெளியீடு
தெலுங்கானாவில் வழக்கறிஞர் தம்பதி நடுரோட்டில் வழிமறித்து வெட்டிக் கொலை: பதைபதைக்கும் படுகொலை காட்சிகள் வெளியீடு
தெலுங்கானாவில் பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் தம்பதியரான வாமன் ராவ் மற்றும் நாகமணி ஆகியோர் கூலிப்படையினரால் நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர்கள் இருவரும் தலைமை நீதிபதியிடம் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாதுகாப்பு அளிக்கவும் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், ராமகுண்டம் அருகே காரில் சென்ற அவர்களை வழிமறித்த கூலிப்படையினர் இருவரையும் துடிக்க துடிக்க வெட்டிச் சாய்த்துத் தப்பிஓடிவிட்டனர்.
இந்தக் கொடூரக் கொலைகளை பலர் செல்போன் மூலம் படம் எடுத்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. வீடியோ காட்சிகளில் பதிவான குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்
Comments