நைஜீரியாவில் 27 மாணவர்களைக் தீவிரவாதிகள் கடத்திச் சென்றதால் மீண்டும் பதற்றம்

0 849
நைஜீரியாவில் 27 மாணவர்களைக் தீவிரவாதிகள் கடத்திச் சென்றதால் மீண்டும் பதற்றம்

ப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் 27 மாணவர்களை கடத்திச் சென்றுள்ளனர்.

வடமேற்குப் பகுதியில் உள்ள நைஜர் மாகாணத்தில் உள்ள ககாரா என்ற இடத்தில் ராணுவ உடையணிந்த சில தீவிரவாதிகள் அரசுப் பள்ளியின் விடுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இதில் ஒரு மாணவன் உயிரிழந்த நிலையில், 27 மாணவர்களையும், சில ஆசிரியர்களையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இதனையடுத்து அப்பகுதிக்கு ராணுவத்தினர் விரைந்துள்ளனர்.

இதே பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் 300 மாணவர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments