புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார்
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவருக்கு முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் அதிகார வரம்புகள் தமக்குத் தெரியும் என்றும், அதற்கேற்ப தம்முடைய செயல்பாடுகள் இருக்கும் என்றும் கூறினார்.
Comments