மத்தியப் பிரதேச பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

மத்தியப் பிரதேச பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் பேருந்து ஒன்று சித்தியில் அருகே உள்ள நீர் நிரம்பிய கால்வாயில் மூழ்கியது. இதில் 20 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 47 பேரின் சடலங்கள் ஏற்கனவே மீட்கப்பட்டன. மேலும் ஒரு பெண் மற்றும் ஆறு மாத சிறுமி உட்பட நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்த விபத்துக்கு காரணமானதாக பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரமான சம்பவம் நடந்த இடத்தையும், குடும்பத்தினரையும் சந்திக்க விரும்பினேன் ஆனால் மீட்பு பணிகள் பாதிக்கக்கூடும் என்று முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
Comments