அர்ஜென்டினா சென்றடைந்தது சீரம் நிறுவனத்தின் 5.8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

0 591
அர்ஜென்டினா சென்றடைந்தது சீரம் நிறுவனத்தின் 5.8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

சீரம் நிறுவனத்தின் 5 லட்சத்து 80 ஆயிரம் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி அர்ஜென்டினாவை சென்றடைந்தது.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து பெங்களூருவை சேர்ந்த சீரம் மற்றும் ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் 5 லட்சத்து 80 ஆயிரம் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிகளை வாங்கி உள்ளது.

தலைநகர் பியூனஸ் ஏர்ஸை தடுப்பூசிகள் சென்றடைந்த நிலையில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், போலீசார், மூத்த குடிமக்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்த அர்ஜென்டினா அரசு முடிவு செய்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments