நடுரோட்டில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த கார்: உடல் கருகி இருவர் உயிரிழப்பு

நடுரோட்டில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த கார்: உடல் கருகி இருவர் உயிரிழப்பு
குஜராத் மாநிலம் தாஹோத் பகுதியில் சாலையில் ஒரு கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் இரண்டு பேர் உயிருடன் கருகி உயிரிழந்தனர்.
ஜாலோட் பைபாஸ் சாலையில் ஒரு பிக் அப் சரக்கு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதைக் கண்டு ராஜஸ்தானில் இருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் மீது மோதியதில் கார் தீப்பிடித்தது.
காருக்குள் மதுபானங்கள் அடுக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாகப் பரவியது. பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும் காருக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்துப் போட்டனர். ஆனால் அந்த இருவரும் தீயில் கருகி உயிரிழந்துவிட்டனர்.
Comments