ஜி.எஸ்.டி. வரம்புக்குள் எரிவாயு... பிரதமர் அறிவிப்பு!

0 39694
ஜி.எஸ்.டி. வரம்புக்குள் எரிவாயு... பிரதமர் அறிவிப்பு!

இயற்கை எரிவாயு விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி இராமநாதபுரம் இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம், சென்னை மணலி சிபிசிஎல் ஆலையில் பெட்ரோலில் இருந்து கந்தகத்தை நீக்கும் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி காவிரிப் படுகையில் அமையவிருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இயற்கை எரிவாயு திட்டங்கள், மாசு குறைந்தவையாக இருந்தாலும், மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க, சூரிய மின்னாற்றல் உற்பத்திக்கு முக்கியத்துவமும், ஊக்கமும் அளிக்கப்படுவதாக கூறினார். எல்இடி பல்புகளை பயன்படுத்துவதன் மூலம், மின்தேவை குறைந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். 

சூரிய ஆற்றல் பயன்பாடு, அதன்மூலமான மின் உற்பத்தி உள்ளிட்ட மாசுமருவற்ற எரிபொருள் பயன்பாட்டுக்கு, ஒரே முகமாக மாற வேண்டியது என்பது, இந்தியர்களாகிய நம் ஒவ்வொரு கடமையாகும் என்றும், பிரதமர் தெரிவித்துள்ளார். எந்தவொரு திட்டமானாலும், மக்களின் ஆதரவு இல்லாவிட்டால், சாத்தியமாகாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments