ஆட்டோவில் சென்ற மாணவியை செல்போனில் படம் எடுத்த இளைஞருக்கு... அந்த மாணவி முன்பே செருப்படி பூஜை போட்ட மக்கள்
தெலங்கானாவில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை செல்போனில் படம் எடுத்த இளைஞருக்கு செருப்படி விழுந்தது. காமா ரெட்டி மாவட்டம் பழைய ராஜ பேட்டையை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் புகைப்படம் எடுத்தான்.
இதுகுறித்து அந்த மாணவி ஊர் மக்களுக்கு தெரிவித்ததை அடுத்து, இளைஞரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், அந்த மாணவியை வைத்து அந்த இளைஞரை செருப்பால் அடிக்க வைத்தனர். தகவலறிந்து வந்த காமா ரெட்டி போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments