விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ததில் என்ன தவறு இருக்கிறது.... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

0 4897
தேர்தல் நேரத்தில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற அரசாக, ஆளும் அதிமுக அரசு உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற அரசாக, ஆளும் அதிமுக அரசு உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கனமழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ததில் என்ன தவறு இருக்கிறது என்றும் முதலமைச்சர் வினவியுள்ளார். 

தமிழ்நாட்டில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆறாம் கட்ட பரப்புரையை தொடங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில், கட்சியினர், பொதுமக்கள், மகளிர் அமைப்பினர், இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர் உட்பட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி, முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அதிமுகவின் இரட்டை இலக்கை வாக்குசேகரித்த முதலமைச்சருக்கு, பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்கள் பெறுவதை முதலமைச்சர் விமர்சித்தார். குறைத்தீர் முகாம்கள் மூலம், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 5 லட்சம் மனுக்களுக்கு அரசு தீர்வு கண்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். வறட்சியால், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதில் என்ன தவறு என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

கொங்கராயகுறிச்சி சட்டநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது இருமல் வந்ததால் தாம் தண்ணீர் தான் குடிப்பதாகவும், சத்தான பால் குடிப்பதாக நினைத்து செய்தி போடுகிறார்கள்" எனப் பேசி முதலமைச்சர் கலகலப்பூட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை, வருகிற சட்டமன்ற தேர்தலில், மீண்டும் நிரூபிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments