திமுக அமைக்கும் ஆட்சி, மக்களுக்கு நிம்மதி தரும் ஆட்சி - மு.க.ஸ்டாலின்

0 2893

துரையை அடுத்து ஒத்தக்கடையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தபட்டு நிரந்த தீர்வு காணப்படும் என்றார்.

திமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று கலைஞர் விரும்பியதாகவும், இன்னும் மூன்றே மாதங்களில் அந்த ஆசையும் நிறைவேறத் தான் போகிறது என்றும் அவர் கூறினார்.

மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் பாலம் கட்டுவது இல்லை என்ற அவர், தேவையில்லாத, அவசியமில்லாத இடத்தில் பாலம் கட்ட திட்டமிட்டதாக புகார்கள் எழுந்துள்ளது என்றார். .

மதுரையை மாற்றுவதற்கான கூட்டம் தான் இந்தக் கூட்டம் என்ற அவர்,மதுரையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தையும் வளர்த்தெடுப்போம் என்றார். அடுத்து தமிழகத்தில் திமுக அமைக்கும் ஆட்சியானது மக்களாட்சியாக அமையும் என்றும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிம்மதி தரும் ஆட்சியாக அமையும் என்றும் அவர் கூறினார். சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். சட்ட விரோதச் செயல்பாடுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments