கோவில் என்பது பிரிவினைக்கான இடம் அல்ல... யாரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

0 2136
கடவுள் எந்த சாதியையும் அங்கீகரிப்பதில்லை என்றும் வேறுபாடுகளுக்கு இடையே இறைவன் இருப்பதில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடவுள் எந்த சாதியையும் அங்கீகரிப்பதில்லை என்றும் வேறுபாடுகளுக்கு இடையே இறைவன் இருப்பதில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி திருவானைக்கோவில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் குழு அமைக்க கோரி பொது நல மனு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கோயில் என்பது மன அமைதிக்காக தான், மனிதர்கள் இடையே பாகுபாடு உருவாக்குவதற்காக அல்ல என்றனர். எந்தவித ஏற்றத்தாழ்வு, பாகுபாடும் கடவுள் பார்ப்பதில்லை என்றும், அவர்கள் கூறினர்.

திருவிழாவில் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டக்கூடாது என்றும் தெரிவித்தனர். எல்லைப்பிடாரி அம்மன் கோவில் பிரச்சனைக்கு பேச்சு நடத்தி இணை ஆணையர் முடிவு எடுக்க உத்தரவிடுவதாக கூறி,  வழக்கை தள்ளுபடி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments