பகட்டாக நடைபெற்ற தெலங்கானா முதல்வர் பிறந்தநாள் விழா : 2.5 கிலோ தங்கத்தினாலான சேலையை அம்மனுக்கு சாற்றி வழிபாடு

0 2329

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் 68ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், முன்னெப்போதும் இல்லாத வகையில், மிக ஆடம்பரமாக, பகட்டாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது. கேசிஆரின், குலதெய்வ கோவிலான, ஹைதராபாத் பால்கம்பேட்  எல்லம்மா கோவிலில், இரண்டரை கிலோ தங்கத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட, தங்க சேலை, அம்மனுக்கு சாத்தப்பட்டது.

ஹைதராபாத் ஜாலவிஹார் நெக்லேஸ் சாலையில், முப்பரிமாண முறையில் தயாரிக்கப்பட்ட, கேசிஆர்-ன், வாழ்க்கை வரலாற்று ஆவணப் படமும் திரையிடப்பட்டது.

இந்த ஆடம்பரங்கள் போக, ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை, தெலுங்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களை முன்னிலைப்படுத்தி, டிஆர்எஸ்  கட்சியின் மேற்கொண்டனர். மேலும், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், நர்சரி கார்டன் ஒன்று, மலர்களால், கேசிஆரின் உருவத்தை படைத்து காட்சிப்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments