உள்நாட்டிலேயே தொலைத் தொடர்பு கருவிகளை தயாரிக்க ரூ.12,195 கோடி ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உள்நாட்டிலேயே தொலைத் தொடர்பு கருவிகளை தயாரிப்பதற்கு ஊக்கத்தொகையாக 12 ஆயிரத்து 195 கோடி ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த திட்டத்தால் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செலவு குறையும் என்றார்.
இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்க ஆயத்தமாகி வரும் சூழலில், 85 சதவீத வயர்லெஸ் தொலைத் தொடர்பு சாதனங்கள் இன்னும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த திட்டத்தின்படி உள்நாட்டில் தொலைத் தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் வரை 4 முதல் 6 சதவீதம் வரை உற்பத்தி செலவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
Comments