பஞ்சாப் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது

0 1144

ஞ்சாப் மாநிலத்தில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பதான்கோட், பாதின்டா, ஹோசியார்பூர், மோகா, கபூர்தலா உள்ளிட்ட 7 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், அனைத்திலும், காங்கிரஸ் வெற்றிப்பெற்றுள்ளது.

53 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதின்டா மாநகராட்சியை, காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. 80 நகராட்சி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 65 நகராட்சிகளை காங்கிரசும், 10ல் சுயேட்சைகளும், 5ல் சிரோன்மணி அகாலிதளமும் வென்றுள்ளன. பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள், பெரும் பின்னடவை எதிர்கொண்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments