பத்திரிகையாளர் பிரியா ரமணி மீதான முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பரின் வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்

0 1024

த்திரிகையாளர் பிரியா ரமணி மீது முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த 2018 ல் MeeToo இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது, எம்.ஜே.அக்பர் தமக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றஞ்சாட்டி பிரியா ரமணி டுவிட் செய்தார். அதைத் தொடர்ந்து, பத்திரிகை ஆசிரியருமாக இருந்த அக்பர் மீது இதே குற்றச்சாட்டை அவருடன் பணிபுரிந்த ஏராளமான பெண்கள் கூறினர்.

அதை மறுத்து 2018 அக்டோபரில், அக்பர், பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் பிரியா ரமணி குற்றமற்றவர் என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், எத்தனை காலமானலும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து எந்த இடத்திலும் முறையிட பெண்களுக்கு உரிமை உள்ளது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments