நாட்டின் சிறிய நகரங்களில் வசிப்போரிடமும் திறமைக்கு பஞ்சமில்லை - பிரதமர்

0 1383
தேவையற்ற கட்டுப்பாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சிறிய நகரங்களில் தகவல் தொழில் நுட்ப துறைக்கு ஏற்ப உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவன சங்கத்தின் மாநாட்டில் காணொலி மூலம் பேசிய அவர் இதனை கூறினார். நாட்டின் சிறிய நகரங்களில் உள்ளோரிடமும் திறமைக்கு பஞ்சமில்லை என்ற அவர், அந்த திறமைகளை ஊக்குவிக்கதான் ஆட்கள் தேவை என்றார்.

தகவல் தொழில் நுட்ப துறையில் உள்ளவர்கள் சிறிய நகரங்களில் இருக்கும் திறமைசாலிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற அவர், இதற்கு ஏற்ப சிறிய நகரங்களில் உள்கட்டமைப்பை அரசு மேம்படுத்தும் என்றார். 

உலக தரம் வாய்ந்த பொருட்களை உருவாக்க வேண்டும் என்றும், உலகத்திற்கே இந்தியா வழிகாட்டும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கொரானா காலத்தில் நாட்டின் தொழில் நுட்பமும், அறிவியலும் தன்னை நிரூபித்துள்ளதோடு, வளர்ச்சியும் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா சூழலில் பிற தொழிலகங்கள் மூடப்பட்ட நிலையில், மென்பொருள் நிறுவனங்கள் தீவிரமாக இயங்கியதாக அவர் கூறினார். மற்ற தொழில்கள் பின்னடவை சந்தித்த நிலையில் மென்பொருள் துறை மட்டும் 2 சதவிகித வளர்ச்சியை கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இப்போது உலகமே இந்தியாவை உற்று நோக்குவதாக கூறிய அவர், சவால்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் நாடு தயங்காது முன்னேறும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments