அமைச்சர் S.P.வேலுமணிக்கு எதிரான வழக்கை தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடாது - எதிர்க்கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P, வேலுமணிக்கு எதிரான வழக்கை தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P, வேலுமணிக்கு எதிரான வழக்கை தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு , தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி,செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என தலைமை செயலாளர் முடித்து வைத்துள்ளதால், வழக்கையும் முடிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,தேர்தல் சமயத்தில் இந்த வழக்கை காரணம் காட்டி அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டவோ அல்லது அவதூறு பரப்பவோ கூடாது என உத்தரவிட்டு, இறுதி விசாரணையை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்
Comments