புதுச்சேரியில், ராகுல் காந்தியை வைத்துக் கொண்டே முதல்வர் நாராயணசாமி மீது சரமாரி புகார் தெரிவித்த மீனவ பெண்கள்

0 9278
புதுச்சேரியில், ராகுல் காந்தியை வைத்துக் கொண்டே, காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமி குறித்து, மீனவ சமுதாய பெண்கள், சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

புதுச்சேரியில், ராகுல் காந்தியை வைத்துக் கொண்டே, காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமி குறித்து, மீனவ சமுதாய பெண்கள், சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

தேர்தல் பரப்புரை மேற்கொள்ள புதுச்சேரி வந்த ராகுல் காந்தி, சோலை நகரில், மீனவர்கள், மீனவ சமுதாய பெண்களை சந்தித்து, கலந்துரையாடினார். அப்போது, ராகுலை, காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேணி முத்தமிட்டு வரவேற்றார்.

பின்னர், முதல்வர் நாராயணசாமியை வைத்துக் கொண்டு, ராகுல் கலந்துரையாடலை தொடங்கியபோது, நிவர் புயலின்போது, காங்கிரஸ் அரசு தங்களை கண்டுகொள்ளவில்லை என மீனவ பெண்கள் குற்றம்சாட்டினர். தன் மீதான புகார்களை, வருத்தங்களை, நாராயணசாமியே, ராகுலுக்கு மொழிபெயர்த்தார்.

தாம் அடுத்தமுறை புதுச்சேரி வரும்போது, தன்னை படகில், கடலுக்கு அழைத்துச் செல்லுமாறு, மீனவர்களிடம், ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments