சேலத்தில் பைக்கில் வந்து LED பல்பு திருடிய மர்மநபர்..! சிசிடிவி காட்சிகள் வெளியீடு
சேலத்தில் பைக்கில் வந்து LED பல்பு திருடிய மர்மநபர்..! சிசிடிவி காட்சிகள் வெளியீடு
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து, எல்.இ.டி. பல்பை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
வெள்ளாண்டி வலசு பகுதியில் மதியழகன் என்பவருடைய பூட்டிக் கிடந்த செல்போன் கடைக்கு வந்த மர்ம நபர், எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் வேறொரு விஷயத்திற்காக காத்திருப்பது போல் வெகுநேரமாக பாவனை செய்து கொண்டிருந்தார்.
பின்னர், அருகேயுள்ள பேக்கரிக்கு சென்று டீ வாங்கி வந்து குடித்துகொண்டே ஆள் நடமாட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த அவர், கண் இமைக்கும் நேரத்தில் அங்கு பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி. பல்பை எடுத்து வேஷ்டிக்குள் மறைத்து வைத்து பைக்கில் தப்பியோடிவிட்டார்.
Comments