பிக்பேஸ்கட் நிறுவனத்தின் 68 சதவீத பங்குகளை வாங்குகிறது டாடா குழுமம்
பிக்பேஸ்கட் நிறுவனத்தின் 68 சதவீத பங்குகளை வாங்குகிறது டாடா குழுமம்
பிக் பேஸ்கட் நிறுவனத்தின் 68 சதவீத பங்குகளை டாடா குழுமம் கையகப்படுத்த இருக்கிறது.
அதற்காக சுமார் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதால், உணவுப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வரும் பிக் பேஸ்கட் நிறுவனத்தின் மதிப்பு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயை தாண்டி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்குப் பின் ஆன்லைன் முறையில் பொருட்களை வாங்குவது கணிசமாக அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பேஸ்கட் நிறுவனம், இந்தியாவில் 25 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
Comments