ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் சதமடித்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் சதமடித்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஒன்பதாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பெட்ரோல் மீது 36 விழுக்காடும், டீசல் மீது 26 விழுக்காடும் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படுகிறது.
இதனால் ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை 96 ரூபாயாகவும், டீசல் விலை 88 ரூபாய் 34 காசுகளாகவும் உள்ளது. அந்த மாநிலத்தின் தொலைவுப் பகுதியான ஸ்ரீகங்கா நகருக்கு எரிபொருள் கொண்டுசெல்லச் செலவு அதிகம் என்பதால் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாய் 13 காசுகளாகவும், டீசல் விலை 92 ரூபாய் 13 காசுகளாகவும் உள்ளது.
Comments