புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி எதிர்கட்சிகளின் எம்எல்ஏக்கள் 14 பேர் மனு

0 1651
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி எதிர்கட்சிகளின் எம்எல்ஏக்கள் 14 பேர் மனு

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் துணை நிலை ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டும், அமைச்சரவையை கலைக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், துணை நிலை ஆளுநர் மாளிகையில் மனு அளித்துள்ளனர்.

என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுகவை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள், துணை நிலை ஆளுநர் செயலரிடம் மனு அளித்து, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments