டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பாப் டூப்ளசிஸ் அறிவிப்பு

0 3390
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பாப் டூப்ளசிஸ் அறிவிப்பு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பாப் டூப்ளசிஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய டூப்ளசிஸ், கடைசியாகக் கடந்த எட்டாம் தேதி பாகிஸ்தான் அணியுடன் ராவல்பிண்டியில் நடைபெற்ற டெஸ்டில் விளையாடினார்.

மொத்தம் 69 டெஸ்ட் போட்டிகளில் நாலாயிரத்து 163 ரன்களைக் குவித்துள்ளார். அடுத்த இரு ஆண்டுகளில் 2 இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற உள்ளதால் அதில் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments