கோவை - அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலப் பணிக்கு உரிமையாளர்கள் அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்தக் கூடாது - சென்னை நீதிமன்றம் உத்தரவு

0 689
கோவை - அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலப் பணிக்கு உரிமையாளர்கள் அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்தக் கூடாது - சென்னை நீதிமன்றம் உத்தரவு

கோவை அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலப் பணிக்கு உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்தக் கூடாது எனச் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை - அவிநாசி சாலையில் உப்பிலிப்பாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு 1600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள்  நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிராக நில உரிமையாளர்கள் 8பேர் தாக்கல் செய்த மனுவில் கட்டட உரிமையாளர்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல், நிலம் கையகப்படுத்துவது சட்டவிரோதம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது புகைப்படங்களைப் பார்த்த நீதிபதி சேஷசாயி, உரிய நோட்டீஸ் கொடுக்காமல் எப்படி இவ்வளவு பெரிய கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டது என வியப்பு தெரிவித்தார்.

உயர்மட்டச் சாலைப் பணிகளுக்காக மனுதாரர்களின் அனுமதியின்றி அவர்களின் இடத்தைக் கையகப்படுத்தக் கூடாது எனக் கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments