அதிமுக ஆட்சியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது: முதலமைச்சர்

0 1247
அதிமுக ஆட்சியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது: முதலமைச்சர்

வறட்சியால், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ததில் என்ன தவறு இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் முன்பாக தனது ஆறாவது கட்ட தேர்தல் பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கினார். பொதுமக்களிடம் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனுக்கள் பெற்று வருவதை அவர் கடுமையாக விமர்சித்தார்.

 வறட்சியால், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.

 பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 5 லட்சம் மனுக்களுக்கு அரசு தீர்வு கண்டுள்ளதாக முதலமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கிராமத்தில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

 ஆழ்வார் திருநகரி பகுதியில் தாமிரபணி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை அமைக்கும் பணி துவக்கப்படுவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அடுத்த ஆட்சியில் அதிமுக வரும்போது தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் சேமிக்கப்படும் என்று உறுதி அளித்தார். கொங்கராயகுறிச்சி சட்டநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது இருமல் வந்ததால் தாம் தண்ணீர் தான் குடிப்பதாகவும், சத்தான பால் குடிப்பதாக நினைத்து செய்தி போடுகிறார்கள்" என பேசி கலகலப்பூட்டினார்.

திருச்செந்தூரில் அதிமுக மகளிரணி கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர், இந்தியாவிலேயே மகளிர் சுய உதவிக்குழு அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழகம் தான் என்றார். அவர்களுக்கு அதிமுக அரசு 82 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி இணைப்பு கடன் கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments