'என்னை சிறை பிடித்துள்ளனர்!' - துபாய் மன்னரின் மகள் கதறும் வீடியோவால் அதிர்ச்சி

தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனவும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதுவின் மகள் ஒருவர் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு எமிரேட்டின் துணை அதிபர் மற்றும் பிரதமருமான ஷேக் முகம்மதுவிற்கு பல மனைவிகள் உள்ளனர். அவர்களில் ஒரு மனைவிக்குப் பிறந்த மகளான ஷேக்கா லத்தீபா, கடந்த 2018 மார்ச் மாதம் துபாயில் இருந்து கடல் வழியாக தப்ப முயன்றார்.
இந்தியாவுக்கு வர முயன்ற அவரை இந்திய கடலோர காவற்படை உதவியுடன் ஷேக் முகம்மதுவின் கமாண்டோக்கள் வழிமறித்து பிடித்தனர். பின்னர் துபாய் அல் அவயர் மத்திய சிறையில் தாம் 3 மாதங்கள் அடைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சிறையாக மாற்றப்பட்ட வில்லா ஒன்றில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் ஷேக்கா லத்தீபா கூறும் செல்போன் வீடியோ காட்சிகளை பிபிசி ஒளிபரப்பு செய்துள்ளது.
Comments