கடலிலிருந்து வெளியேறும் அதிகளவு நுரை : கிராமத்திற்குள் படையெடுக்கும் கடல் நுரையால் மக்கள் அவதி

கடலிலிருந்து வெளியேறும் அதிகளவு நுரை : கிராமத்திற்குள் படையெடுக்கும் கடல் நுரையால் மக்கள் அவதி
அயர்லாந்து நாட்டில் புன்மஹோன் (BUNMAHON) என்ற கிராமம் கடல் நுரையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலிலிருந்து பொங்கிவரும் நுரை, காற்றில் பறந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்ததால் மக்கள் சிரமத்தை சந்துத்துள்ளனர். வீடுகளின் மேற்பரப்பிலும், தெருக்களிலும் வெண் போர்வை போர்த்தியது போன்று கடற்கரை நுரை படிந்துள்ளது.
கடலில் கரைந்த கரிமப் பொருட்கள் காற்று மற்றும் அலைகளால் கிளர்ந்தெழும்போது இதுபோன்ற நுரை ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments