வங்கிக்கணக்கு இல்லாததால், ரூ. 5 லட்சம் பணம் கரையான் அரித்து நாசம்... பன்றி வியாபாரிக்கு நேர்ந்த சோகம்!

0 123439
ஆந்திராவில் பன்றி வியாபாரி ஒருவர் வங்கிக்கணக்கு இல்லாத காரணத்தினால் பானையில் சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணம் கரையான் அரித்து நாசமானது.

ஆந்திராவில் பன்றி வியாபாரி ஒருவர் வங்கிக்கணக்கு இல்லாத காரணத்தினால் பானையில் சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணம் கரையான் அரித்து நாசமானது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மைலாவரம் பகுதியை சேர்ந்த பிஜிலி ஜமாலயா என்பவர் பன்றிகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு, வங்கியில் கணக்கு தொடங்கி பணத்தை சேமிக்கலாம் என்கிற விழிப்புணர்வு இல்லை. யாரிடமும் வங்கிக்கணக்கு தொடங்குவது குறித்து கேட்டும் அறிந்து கொள்ளவில்லை. இதனால் , பிஜிலிக்கு எந்த வங்கியிலும் கணக்கு இல்லை. இதனால், பன்றி விற்பனையில் கிடைக்கும் லாபத்தை தன் மனைவியிடம் கொடுத்து பையில் போட்டு வைத்துள்ளார்.

தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் சொந்தமாக வீடு கட்ட வேண்டுமென்பது பிஜிலி ஜமாலயாவின் இமாலய கனவு. இதற்காக, ரூ. 5 லட்சம் வரை அவர் சேமிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக, கடுமையாக உழைக்கவும் செய்தார். எறும்பு சேமிப்பது போல பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமிம்து பையில் போட்டு வைத்திருந்தார். கிட்டத்தட்ட 5 லட்ச ரூபாய் பணமும் சேர்ந்து விட்டது. ஆனால், பிஜிலினின் சொந்த வீடு கட்டும் கனவுக்கு கரையான்கள் வடிவில் வந்தது ஆபத்து. ஆம்... பிஜிலி ஆசை ஆசையாக வீடு கட்ட சேமித்து வைத்திருந்த பணத்தை கரையான் அரித்து விட்டது. கரையானால் பிஜிலி சேமித்து வைத்த ரூ. 500, 200 ரூபாய் நோட்டுகள் என 5 லட்வ ரூபாய் அரிக்கப்பட்டதை கண்டும் அவர் மிகுந்த வேதனையடைந்தார்.

ஆனால், அடுத்து ஜமாலாயா செய்த காரியம் தான் சற்று வித்தியாசமானது. கரையான்கள் அரித்த அந்த பணத்தை தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடத்தில் பிஜிலி கொடுத்து சென்றுள்ளார். குழந்தைகள் கையில் 500, 200 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்து விளையாடுவதை கண்டு அக்கம் பக்கத்தினர் விசாரித்துள்ளனர். அப்போதுதான், பணத்தை பிஜிலி கொடுத்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, போலீஸார் பிஜிலியிடம் விசாரித்த போது உண்மை நிலவரம் தெரிய வந்தது. படிப்பறிவு இல்லாததாலும் வங்கிக்கணக்கு தொடங்க வேண்டுமென்ற விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும் பிஜிலியின் 5 லட்ச ரூபாய் நாசமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு அவருக்கு இழந்த பணத்திற்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments