”என்னை ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி” - அஸ்வின் நெகிழ்ச்சி..!

தன்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது எப்படி உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த முடியவில்லை என டிவிட்டரில் பதிவிட்டுள்ள அஸ்வின், தன்னை விரும்பிய அனைவருக்கும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
I can’t express how I feel right now, but I am so very grateful to each and everyone who has wished me over the last few days. I would also like to thank the #KnowledgableChennaiCrowd for turning up in numbers and making me feel like a hero. ??? pic.twitter.com/VXEgC0GU2D
Comments